செல்போனை பார்த்து கொண்டே சாலையில் நடந்த தாய். 2 வயது மகள் பரிதாப பலி. அதிர்ச்சி வீடியோ இணைப்பு

1சீனாவில் இரண்டு வயது குழந்தையின் தாய் ஒருவர் குழந்தை அருகில் நடந்து வருவதை கவனிக்காமல் கையில் இருந்த செல்போனை கவனித்து கொண்டே வந்ததால், குழந்தை மீது கார் மோதியது. இந்த விபத்தில் அந்த குழந்தை பரிதாபமாக பலியானது.

செல்போனை கையில் எடுத்துவிட்டால் சுற்றுப்புறத்தில் என்ன நடக்கின்றது என்பதே பலருக்கு மறந்துவிடுகிறது. அந்த வகையில் சீனாவில் ஒரு பெண் தனது இரண்டு வயது குழந்தையுடன் சாலையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அவரது செல்போனில் எஸ்.எம்.எஸ் வந்துள்ளது.

அதை படிப்பதற்காக கையில் வைத்திருந்த குழந்தையை கீழே இறக்கிவிட்டு செல்போனையே பார்த்தபடி நடந்து வந்தார். இந்நிலையில் குழந்தை திடீரென சாலையின் குறுக்கே சென்றது. அந்த சமயத்தில் அந்த பக்கமாக வந்த கார் ஒன்று குழந்தை மீது மோதியதால் பரிதாபமாக பலியானது.

இந்த சம்பவத்தில் குழந்தையின் தாயாருக்கு சமூக வலைத்தள பயனாளிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *