shadow

2 சுயேட்சை ஆதரவு வாபஸால் ஆட்சிக்கு ஆபத்தா? தேவகவுடா விளக்கம்

கர்நாடகாவை சேர்ந்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் 2 பேர், அரசுக்கு அளித்த வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக, அம்மாநில ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளதால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கான ஆதரவு எண்ணிக்கை 117ஆக குறைந்துள்ளது. இதனால் அரசுக்கு ஆபத்து என்ற வதந்தி பரவி வரும் நிலையில் இதுகுறித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா, ஆதரவை வாபஸ் பெற்ற 2 எம்எல்ஏக்களும் சுயேட்சைகள் எனவும், அவர்களுக்கு இந்த அளவு முக்கியத்துவம் தர தேவையில்லை எனவும் சில ஊடகங்கள் மட்டுமே இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

கர்நாடகாவில் மொத்தம் உறுப்பினர்கள் எண்ணிக்கை 224 ஆகும். பாஜக எம்எல்ஏக்கள் ம் 104ஆக உள்ளது. காங்கிரஸ் கட்சி 80 எம்எல்ஏக்களும் உள்ளனர் அதுபோல தற்போது ஆட்சி செய்துகொண்டிருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 37 எம்எல்ஏக்களும் உள்ளனர். அங்கு பெரும்பான்மையை என்பது 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. ஆனால், காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு பெரும்பான்மை பலத்தைவிட, 4 எம்எல்ஏக்களின் ஆதரவு கூடுதலாக உள்ளது. இதனால் இரண்டு சுயேட்சை ஆதரவு வாபஸால் இப்போதைக்கு ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்றே கூறப்படுகிறது

Leave a Reply