shadow

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

cricketவிராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் இன்று ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

இந்திய அணியின் பிரதான பயிற்சியாளராக கும்ப்ளே பொறுப்பேற்றவுடன் தொடங்கும் முதல் டெஸ்ட் என்பதால் கிரிக்கெட் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பை இந்த தொடர் ஏற்படுத்தியுள்ளது.

இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ஷிகார் தவான், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, விருத்திமான் சகா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது ‌ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், அமித் மிஸ்ரா, ராகுல், ஸ்டூவர்ட் பின்னி, ‌ஷர்துல் தாக்கூர்.

வெஸ்ட் இண்டீஸ்: ஹோல்டர் (கேப்டன்), கிரேக் பிராத்வெயிட் (துணை கேப்டன்), சாமுவேல்ஸ், டாரன் பிராவோ, லியான் ஜான்சன், பிளாக்வுட், கார்லோஸ் பிராத்வெயிட், ராஜேந்திர சந்திரிகா, ரோஸ்டன் சேஸ், டவ்ரிச், கும்மின்ஸ், கேப்ரியல், தேவேந்திர பிஷூ.

Leave a Reply