பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால் அதன் பின்னர் மாற்றான், துப்பாக்கி, ஜில்லா போன்ற படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
காஜல் அகர்வால் சமூக இணையதளமான ஃபேஸ்புக்கில் ஒரு கோடிக்கும் அதிகமான லைக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.இவரை அடுத்து ஸ்ருதிஹாசனுக்கு 62 லட்சம் லைக்குகளும், சமந்தாவிற்கு 52 லட்சம் லைக்குகளும், அனுச்காவிற்கு 48 லட்சம் லைக்குகளும் பெற்றுள்ளனர்.
இதே போன்று காஜல் அகர்வாலின் டுவிட்டர் பக்கத்தை சுமார் 4 லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனர். இந்திய நடிகைகளில் மிக அதிகளவில் லைக்குகள் வாங்கிய நடிகை என்ற பெயரையும் காஜல் அகர்வால் பெற்றுள்ளார்.
தற்போது எவடு என்ற தெலுங்கு படம் உள்பட நான்கு திரைப்படங்களில் காஜல் அகர்வால் நடித்துக்கொண்டு இருக்கின்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.