1964ஆம் ஆண்டிற்கு பின் அதேபோன்ற டைட்டிலில் ஜிவி பிரகாஷ் படம்!
பிரபல இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1964ஆம் ஆண்டு ரவிச்சந்திரன், முத்துராமன் நடித்த படம் ‘காதலிக்க நேரமில்லை’. மெடி கலந்த ரொமான்ஸ் படமான இதே படம் போல் காமெடி ரொமான்ஸ் படம் ஒன்று ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு  ‘காதலிக்க யாருமில்லை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 
அறிமுக இயக்குனர் கமல்பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், பிக்பாஸ் புகழ் ரைசா முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். இருவரும் இந்தப் படத்தில் ஐடி ஊழியர்களாக நடித்து வருகின்றனர்.
காவ்யா மகேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய சிவாநந்தேஷ்வரன் படத்தொகுப்பு பணியை கவனிக்கின்றார். இந்த படத்தில் குருசோமசுந்தரம், யோகிபாபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply