shadow

da4801_650_1019120825261962ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவின் தவறான கொள்கை முடிவால்தான் இந்தியா, சீனாவுக்கு எதிரான போரில் படுதோல்வி அடைந்தது என்ற ரகசிய ஆவணம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் மீது அதிருப்தியில் பொதுமக்களுக்கும் இந்த தகவல் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த ரகசிய தகவல் வெளியானதால் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை இது எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து அச்சம் கொண்டுள்ளது.

1962ம் ஆண்டு இந்தியா -சினா இடையே, நடைபெற்ற போர் தொடர்பாக இந்திய ராணுவ அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டஹெண்டர்சன் புரூக்ஸ் – பகத் என்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை தான் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த போரின் போது,  செய்திகளை சேகர்த்த ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்  நிவ்லி மேக்ஸ்வெல் நேற்று தனது இணையதளத்தில் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். , அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும்,  ராணுவத் தளபதியும் எடுத்த முடிவுதான் இந்தியாவின் படுதோல்விக்கு காரணமாக அமைந்து விட்டதாகவும், அவர்களது தவறான முடிவால் இந்தியாவுக்கு பெரும் உயிரிழப்பும் பொருள் இழப்புகளும் ஏற்பட்டதாகவும் அவர் தன் இணையதளத்தில் கூறியுள்ளார்.

இந்த அறிக்கை தொடர்பான முழு விபரங்களையும் மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், அந்த போரின்போது என்ன நடந்தது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வெண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply