shadow

கின்னஸ் சாதனைக்காக ஒரே நேரத்தில் 196 ஆட்டுக்குட்டிகளை ரோஸ்ட் செய்த சீனர்கள்
lambs
சீனாவில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 196 ஆட்டுக்குட்டிகளை ரோஸ்ட் செய்து அதை சுமார் 4000 பேர்களுக்கு பரிமாறும் நிகழ்ச்சி ஒன்று கின்னஸ் சாதனைக்காக நிகழ்த்தப்பட்டது.

சீனாவில் உள்ள Jianyang என்ற பகுதியில் VIP Shop என்ற இ-காமர்ஸ் நிறுவனம் ஒன்று தங்களுடைய நிறுவனத்தின் விளம்பரத்திற்காகவும், கின்னஸ் சாதனைக்காகவும் மிகப்பெரிய விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது. கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற இந்த விருந்தில் 196 ஆட்டுக்குட்டிகள் எரியும் நெருப்பில் ரோஸ்ட் செய்யப்பட்டு உணவு தயாரானதும் அந்த பகுதியில் உள்ள சுமார் 4000 பேர்களை வரவழைத்து பரிமாறியது.

ஏற்கனவே அந்த பகுதி மக்கள் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த நிலையில் சுடச்சுட ரோஸ்ட் செய்யப்பட்ட ஆட்டுக்குட்டிகளை உண்டு மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியை கின்னஸ் சாதனை நிறுவனம் அங்கீகரித்து அதற்கான சான்றிதழையும் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

lambs 3  lambs1 lambs2 lambs4 lambs5 lambs6 lambs7 lambs8

Chennai Today News: 196 lambs are spit-roasted simultaneously in record-breaking feast in China

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *