shadow

1,90,578 கார்களை ரீ-கால் செய்கிறது ஹோண்டா!
accord
இந்தியாவில் தான் விற்பனை செய்த முந்தைய தலைமுறையைச் சேர்ந்த 22,483 அக்கார்டு கார்கள் (2003 – 2011), 13,603 சிவிக் கார்கள் (2009 – 2011), 1,514 சிஆர்வி கார்கள் (2009 – 2011), 1,37,270 சிட்டி கார்கள் (2008 – 2011), 15,706 ஜாஸ் கார்கள் (2009 – 2011) என மொத்தம் 1,90,578 கார்களில் பழுதடைந்துள்ள Takata நிறுவனம் தயாரித்த Airbag Inflator-ஐ இலவசமாக மாற்றித் தர முடிவு செய்துள்ளது ஹோண்டா. உலகளவில் இந்நிறுவனம் விற்பனை செய்துள்ள கார்களிலும் இந்தப் பிரச்சனை நீடிக்கும் நிலையில், இங்கும் ரீ-கால் நடவடிக்கையை ஹோண்டா மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் சிவிக் மற்றும் சிஆர்வி ஆகிய கார்களில் இன்று முதலும், சிட்டி, ஜாஸ், அக்கார்டு ஆகிய கார்களில் செப்டம்பர் 2016 முதலாகவும் மேற்கூறிய பழுது சரி செய்யப்படும். ஹோண்டாவின் வலைதளத்தில், காரின் 17 எழுத்துகளைக் கொண்ட Vehicle Identification Number (VIN) வைத்து, ரீ-கால் பட்டியலில் தங்களது கார் இருக்கிறதா என இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் செக் செய்து கொள்ளலாம். மேலும் ஹோண்டாவின் டீலர்கள், இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட கார்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொள்வர் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply