shadow

spencer-plazaசென்னை அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் வளாகத்தில் குடிநீர் வரி செலுத்தாத 18 கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை நேற்று அதிரடியாக ஆரம்பித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், சொத்து மதிப்பின் ஏழு சதவிகித்தை குடிநீர் வரியாக வசூலித்து வருகிறது. இந்நிலையில் 619 கடைகள் உள்ள ஸ்பென்சர் வளாகத்தில் வரி செலுத்தாத 18 கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை நேற்று எடுக்கப்பட்டது.

குடிநீர் வாரிய அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் 15 கடைகளின் உரிமையாளர்கள் உடனடியாக ரொக்கம் மற்றும் காசோலைகள் மூலம் வரியை கட்டிவிட்டதால் அவர்கள் கடைகளை சீல் வைக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது. வரி செலுத்தாத மூன்று கடைகளுக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையில் நிதி இயக்குநர் திரு. சி. ஆறுமுகம், மேற்பார்வை பொறியாளர் திரு.எஸ்.எஸ். தினகரன், நிதி கட்டுப்பாட்டு அலுவலர் திருமதி கீதாகுமார், திரு.பீட்டர், திரு. உதயகுமார். பகுதி பொறியாளர் – 9, திரு. குலோத்துங்கன், வருவாய் துணை ஆட்சியர் ஓய்வு திரு. சிம்மன், வட்டாட்சியர் திரு. எம்.ஆர். யுகேந்திரன், மற்றும் பகுதி மற்றும் பணிமனை அலுவலர்கள் உட்பட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply