shadow

18 தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தமிழகத்தில் காலியாகவுள்ள 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த எந்தவித தடையும் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக காலியாக உள்ள 18 தொகுதிகளின் எம்எல்ஏக்களிடம் இருந்து, கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்காக செலவிட்ட பணத்தை வசூலித்து, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவு செய்ய உத்தரவிட கோரி ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் இதுகுறித்து உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிய இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல் ஏக்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு இடைத்தேர்தலை நடத்த ஒருபோதும் இடையூறாக அமையாது என்றும், இதனை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளிப்போட தேவையில்லை எனவும் தெரிவித்து வழக்கை ஜனவரி 4ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Leave a Reply