shadow

Tamilnaduassemblyகடந்த ஜுலை மாதம் 10ஆம் தேதி ஆரம்பமான தமிழக சட்டசபை  கூட்டம், நேற்று மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. சட்டசபையை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானம் குரல் ஓட்டு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனால், சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் பி.தனபால் அறிவித்தார்.

நடந்து முடிந்த சட்டசபை தொடரில் தனியார் கிளப்புகளில் வேட்டி மீதான தடை நீக்கம் உள்பட மொத்தம் 17 மசோதாக்கள் நிறைவேறியுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் நிறைவேறியுள்ள சில முக்கிய மசோதாக்களின் விவரங்கள்:

வேட்டி தடை நீக்கம்: மனமகிழ் மன்றம், உணவகங்கள், திரையரங்குகள், பெரும் வணிக வளாகங்கள், அவைக்கூடங்கள், விளையாட்டு அரங்குகள், அரசால் அறிவிக்கப்படும் இடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வேட்டி அணிந்து வருபவர்களுக்குத் தடை விதித்தால், ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்ற சட்ட மசோதா

*அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறுகள் தோண்டினால் 7 ஆண்டுகள் வரை சிறை என்னும் குழந்தைகளின் உயிர்களை காக்கும் மசோதா

*கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்கள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், பாலியல் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்துபவர்கள் ஒரு முறை குற்றம் செய்தாலும், குண்டர் சட்டத்தில் கைது செய்ய வகை செய்யும் சட்ட மசோதா

*பெண்கள் குழந்தைகள் காப்பகங்களை அனுமதியின்றி நடத்தினால் 2 ஆண்டு சிறை

*தமிழ்நாடு பல்கலைக்கழக துணைவேந்தர் நீக்கம் தொடர்பான பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

 

Leave a Reply