shadow

ஐபிஎல் போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் நடந்து வரும் நிலையில் இதுவரை நடைபெற்ற 10 போட்டிகளில் கிடைத்துள்ள புள்ளிகள் பட்டியலைப் பார்ப்போம்

கடந்த சில ஆண்டுகளாக மோசமாக விளையாடி வந்த டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் தான் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அபாரமாக விளையாடி முதல் இரண்டு இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இந்த அணிகள் தலா 4 புள்ளிகள் பெற்று உள்ளன

நேற்றைய போட்டியில் கிடைத்த சூப்பர் வெற்றியின் மூலம் பெங்களூர் அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது

பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் நான்காவது, ஐந்தாவது இடத்தில் உள்ளன. கொல்கத்தா, சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் 6 முதல் எட்டாவது இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *