shadow

அண்டார்டிகாவில் 1.5 லட்சம் பென்குயின்கள் பரிதாப பலி. அதிர்ச்சியூட்டும் ஆய்வு
penguins
அண்டார்டிகா கண்டத்தில் உள்ள காமன்வெல்த் வளைகுடா என்ற பகுதியில் மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று ஒதுங்கியதால் அந்த பனிப்பாறையில் சிக்கி சுமார் 1.5 லட்சம் பென்குயின்கள் பரிதாபமாக பலியானதாக அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகிவுள்ளது.

அண்டார்டிகாவில் காமன்வெல்த் வளைகுடா பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பென்குயின்கள் அதிகளவு வசித்து வருகின்றன. மூன்று பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட காமன்வெல்த் வளைகுடாவின் கரையோரத்தில் வசிக்கும் பென்குயின்கள் கடலில் இருக்கும்  கூனிப்பொடிகளை உண்டு உயிர்வாழ்ந்து வந்தன.

இந்நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு 2900 சதுர கிலோ மீட்டர் பரப்புக் கொண்ட மிகப்பெரிய பனிப்பாறை காமன்வெல்த் வளைகுடா பகுதியில் ஒதுங்கியது. இந்த பனிப்பாறை இத்தாலி தலைநகர் ரோம் நகரம் அளவுக்கு மிகப்பெரியது. இந்த பனிப்பறை பென்குயின்கள் வாழும் கடற்கரை முழுவதுதையும் அடைத்துவிட்டதால் சுமார் 60 கிலோ மீட்டர்கள் ஆபத்தான வழியில் பயணம் செய்து தங்கள் உணவை தேட வேண்டிய நிலைக்கு அவை தள்ளப்பட்டுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருவதால் சுமார் 1.5 லட்சம் பென்குயின்கள் இறந்துவிட்டதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தற்போது அந்த பகுதியில் 10 ஆயிரம் பென்குயின்கள் மட்டும் உயிரோடு உள்ளன. அண்டார்டிகாவில் அதிகளவில் பனிப்பாறைகள் நகர்வதற்கான காரணத்தை கண்டறிய ஆய்வாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply