இந்தியாவில் பென்செடிலின் (Phensedylin ) என்ற இருமல் மருந்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த இருமல் மருந்து பாட்டிலை இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு அடிக்கடி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன

இந்த நிலையில் இந்திய எல்லைகளில் தீவிரமாக சோதனை செய்தபோது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 1500 பாட்டில்களுக்கும் மேல் கடத்தப்பட்டதாகவும், அதனை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்ததாகவும் இவற்றின் மதிப்பு சுமார் 3 லட்சம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் கடந்த சில மணி நேரத்துக்குப் பின்னர் வாலிபர் ஒருவர் 160 பென்செடிலின் பாட்டிலை எடுத்துக் கொண்டு சென்றதாகவும் அவர் எல்லை பாதுகாப்பு படையினரால் பிடிபட்டார் என்றும் கூறப்படுகிறது.

அவரிடம் இதுகுறித்து விசாரித்தபோது இந்திய எல்லையை தாண்டி இந்த பாட்டிலை வங்கதேசத்துக்கு கொண்டு சென்றுவிட்டால் ஒரு பாட்டிலுக்கு ரூபாய் 1200 தருவதாக தன்னிடம் பேரம் பேசியதாகவும் அதனை அடுத்து தான் இந்த பாட்டிலை கடத்திச் சென்றதாகவும் கூறினார்.

இதுகுறித்து தீவிரமான விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply