shadow

அரசு இசேவை மையங்களில் மேலும் 15 சான்றிதழ்கள்: என்னென்ன தெரியுமா?

தமிழக அரசின் அரசு இசேவை மையங்களில் தற்போது சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல்பட்டதாரி சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட சான்றிதழ் உள்பட ஒருசில சான்றிதழ் வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி கூடுதலாக 15 வகை சான்றிதழ்களை அரசு இசேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி விவசாய வருமானம், சிறுகுறு விவசாயி, விதவை, கலப்புத்திருமணம், வேலையில்லாதவர், குடிபெயர்வு, பள்ளி கல்லூரி சான்றிதழ் நகல், வாரிசு, வசிப்பிட, சொத்து மதிப்பு, அடகு வணிக உரிமம், கடன் கொடுப்போர் உரிமம், இதர பிற்பட்ட வகுப்பினர் என அனைத்து வகையான சான்றிதழ்களையும் இனி அரசு இசேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

லஞ்சம் இன்றி அலைச்சல் இன்றி சான்றிதழ்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் மிக எளிதாக, மிக விரைவாக பெற இசேவை மையங்கள் உதவி வருவதாகவும் பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply