shadow

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் 148 தூண்கள் இடிக்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளத்தில் இருந்த 148 பழைய தூண்கள் இடிக்கப்பட்டதாக யுனெஸ்கோ ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த தூண்கள் இடிப்பால் கோயிலின் ஸ்திரத்தன்மைகே ஆபத்து என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், புனரமைப்பு பணிகள் குறித்து தலைமை ஸ்தபதியிடம் ஒப்புதல் எதையும் பெறவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் மீனாட்சி அம்மன் கோயில் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் கருத்து கூறியபோது, ‘பழைமை நீங்காமல் மானம்பாடி கோயிலை கட்டித்தருவதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 148 தூண்கள் இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என திமுக எம்.எல்.ஏ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கருத்து கூறியபோது, ‘பழங்கால பொக்கிஷங்களை தமிழக அரசு அழித்து வருவதாகவும், வரலாற்று சின்னங்களை புனரமைக்க வேண்டுமே தவிர, மாற்றக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply