பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்கத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 13ஆயிரம் சிறப்ப் பேருந்துகளை இயக்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து பணிபுரிபவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட அவரவர்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாளை மறுநாள் 10ஆம் தேதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
10ஆம் தேதி 600 சிறப்பு பேருந்துகளும், 11ஆம் தேதி 1,325 சிறப்பு பேருந்துகளும், 12ஆம் தேதி 1,175 சிறப்பு பேருந்துகளும், 13ஆம் தேதி 339 சிறப்பு பேருந்துகளும் இயக்க இன்று காலை முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தவிர தமிழகத்தின் முக்கிய பெரிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோன்று 16ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்பி வரவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேருந்து டிக்கெட்டை முன்பதிவு செய்ய விரும்புபவர்கள்  www.tnstc.in என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்யலாம் என்றும், நேரில் முன்பதிவு செய்ய கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் முதல்வரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொங்கல் விடுமுறை தினங்களில் சென்னையை சுற்றிப்பார்க்க வசதியாக சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply