shadow

crudeசர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலைகளை நிர்ணயிக்கும் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் கொள்முதல் விலை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.

சந்தையில் சரக்குவரத்து அதிகரித்தால் விலைகள் வீழ்ச்சியடைவது இயல்பானதே என்றவகையில் கச்சா எண்ணெய் உற்பத்தியும், வரத்தும் அதிகரித்துள்ளதால் தற்போது 13 ஆண்டுகால வரலாறு காணாத அளவில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. சீனாவின் பொருளாதார மந்தநிலையும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கான மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.

அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக காரணம் காட்டி ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்திருந்த பொருளாதாரத் தடைகள் அடுத்த வாரம் விலக்கிக் கொள்ளப்படும். இதையடுத்து, கச்சா எண்ணெய் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க நாடுகளில் ஒன்றான ஈரானும் தற்போது உலகநாடுகளுக்கு பெட்ரோலை ஏற்றுமதி செய்ய தயாராகி வருகின்றது.

இதன்விளைவாக, இந்த ஆண்டின் முதல் 15 நாட்களில் மட்டும் 21 சதவீத விலைச்சரிவை (7.50 டாலர்) கச்சா எண்ணெய் சந்தித்துள்ளது. குறிப்பாக, நேற்று முன்தினம் இருந்த கொள்முதல் விலையைவிட நேற்றைய விலைமட்டும் 1.78 டாலர் குறைந்துள்ளதாக அமெரிக்க வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply