12ஆம் வகுப்பு துணைத் தேர்வு: செப்.17 முதல் ஹால் டிக்கெட்

தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் நாளை முதல் அதாவது திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி முதல் அரசுத் தேர்வுத் துறையின் இணையதளத்தில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி அடையாதவர்கள், செய்முறைத் தேர்வில் கண்டிப்பாக மீண்டும் பங்கேற்பதுடன், எழுத்துத் தேர்வுக்கும் வருகை புரிய வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வுக்கு வர வேண்டும்.

செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தாம் தேர்வெழுதும் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய ஹால் டிக்கெட் இன்றி, எந்தவொரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *