விமானத்தில் திடீர் மூச்சுத்திணறல்: 11 மாத குழந்தை பரிதாப மரணம்

கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்றில் பயணம் செய்த11 மாத குழந்தை மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அர்னவ் வர்மா என்ற 11 மாத குழந்தை மற்றும் அவரது பெற்றோர் தோகாவில் இருந்து ஐதரபாத்திற்கு விமானத்தில் சென்றனர். அப்போது அர்னவ் வர்மாவிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனால் உடனடியாக விமானம் ஐதரபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. உடனடியாக அந்த குழந்தை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *