shadow

11-இல் அரசு ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

chennai iitஅரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் கட்ட மாவட்ட பொதுக் கலந்தாய்வு பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
சேலம் மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகஸ்டு 2016 ஆண்டின் பயிற்சியாளர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 11=ஆம் தேதி தொடங்கி ஜூலை 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தக் கலந்தாய்வில் கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவின் மதிப்பெண் தரவரிசை பட்டியல் (கட் ஆஃப் மதிப்பெண்) அடிப்படையில் நடைபெறுகிறது.
மதிப்பெண் தரவரிசை பட்டியல் விபரம்:

ஜூலை 11: காலை 8, சிறப்பு பிரிவினர், 185 பேர், காலை 10 மணி – 8 ஆம் வகுப்பு 93.5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உள்ள பெண்கள் மட்டும். பிற்பகல் 2 மணி – 10 ஆம் வகுப்பு 99 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை தரவரிசை உள்ள பெண்கள் மட்டும்.

ஜூலை 12: காலை 8 – 10 ஆம் வகுப்பு 74 சதவீதம் முதல் 58 சதவீதம் வரை தரவரிசை உள்ள பெண்கள் மட்டும். பிற்பகல் 2 மணி – 10 ஆம் வகுப்பு 57 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை தர வரிசை உள்ள பெண்கள் மட்டும்.

ஜூலை 13: காலை 8 – 8 ஆம்ம் வகுப்பு பொதுப் பிரிவு 100 சதவீதம் முதல் 62.5 சதவீதம் வரை தரவரிசை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள். பிற்பகல் 2 மணி – 8 ஆம் வகுப்பு பொதுப் பிரிவு 62 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தரவரிசை உள்ள ஆண்கள், பெண்கள்.

ஜூலை 14: காலை 8 மணி – 10 ஆம் வகுப்பு பொதுப் பிரிவு 99 சதவீதம் முதல் 82.5 சதவீதம் வரை தரவரிசை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள். பிற்பகல் 2 – 10 ஆம் வகுப்பு பொதுப் பிரிவு 82 சதவீதம் முதல் 75.5 சதவீதம் வரை தரவரிசை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்.

ஜூலை 15: காலை 8 மணி – 10 ஆம் வகுப்பு பொதுப் பிரிவு 75 முதல் 71 சதவீதம் வரை தரவரிசை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்.
பிற்பகல் 2 மணி – 10 ஆம் வகுப்பு பொதுப் பிரிவு 70.5 சதவீதம் முதல் 67.5 சதவீதம் வரை தரவரிசை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்.

ஜூலை 16: காலை 8 மணி – 10 ஆம் வகுப்பு பொதுப் பிரிவு 67 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை தரவரிசை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள். பிற்பகல் 2 மணி – 10 ஆம் வகுப்பு பொதுப் பிரிவு 64.5 சதவீதம் முதல் 62.5 சதவீதம் வரை தரவரிசை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்.

எனவே, மாவட்ட கலந்தாய்வு பயிற்சியாளர்கள் சேர்க்கையில் விண்ணப்பித்த தகுதியுள்ள நபர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply