exam date10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் நேற்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு தேர்வுகள் இயக்ககம் விடுத்துள்ள அறிவிப்பில், ”10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2015ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2015ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகளுக்கான அதிகாரபூர்வ கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா அறிவித்துள்ளார்.

 

 

பிளஸ்-2அட்டவணை

பிளஸ்-2 தேர்வுக்கான அட்டவணை விவரம் வருமாறு:-

2015-ம் ஆண்டு மார்ச் 5-ந்தேதி- தமிழ் முதல் தாள்.

6-ந்தேதி- தமிழ் இரண்டாம் தாள்.

9-ந்தேதி- ஆங்கிலம் முதல் தாள்.

10-ந்தேதி- ஆங்கிலம் இரண்டாம் தாள்.

13-ந்தேதி- கம்யூனிகேட்டிவ் இங்கிலிஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்புத்தமிழ்.

16-ந்தேதி- வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.

18-ந்தேதி- கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ்.

20-ந்தேதி- அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி தேர்வுகள்.

23-ந்தேதி- வேதியியல், அக்கவுண்டன்சி.

27-ந்தேதி- இயற்பியல், பொருளாதாரம்.

31-ந்தேதி- உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்.

எஸ்.எஸ்.எல்.சி. அட்டவணை

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான கால அட்டவணை விவரம் வருமாறு:-

மார்ச் 19-ந்தேதி- தமிழ் முதல் தாள்.

24-ந்தேதி- தமிழ் இரண்டாம் தாள்.

25-ந்தேதி- ஆங்கிலம் முதல் தாள்.

26-ந்தேதி- ஆங்கிலம் இரண்டாம் தாள்.

30-ந்தேதி- கணிதம்.

ஏப்ரல் 6-ந்தேதி- அறிவியல்.

10-ந்தேதி- சமூக அறிவியல்.

12ஆம் வகுப்பு தேர்வுகள் காலை 10 மணி முதல் 1.15 மணி வரையிலும், 10ஆம் வகுப்பு தேர்வுகள் காலை 9.15 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *