shadow

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை தமிழக தேர்வுத்துறை இயக்ககம் தற்போது அறிவித்துள்ளது.

இதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 2-ம் தேதியும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 8-ம் தேதியும் தொடங்குகின்றது. 12ஆம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான விரிவான அட்டவணையை கீழே பார்க்கலாம்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை விபரம்:

* தேர்வு எழுதும் கால நேரம்: காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15-க்கு முடிகிறது.

02.03.17 – வியாழன் – தமிழ் முதல் தாள்

03.03.17 – வெள்ளி –  தமிழ் இரண்டாம் தாள்

06.03.17 – திங்கள் – ஆங்கிலம் முதல் தாள்

07.03.17 – செவ்வாய்  –  ஆங்கிலம் இரண்டாம் தாள்

10.03.17 – வெள்ளி – வணிகவியல் /  மனையியல் / புவியியல்

13.03.17 – திங்கள் – வேதியியல் / கனக்குப் பதிவியல்

17.03.17 – வெள்ளி – தகவல் தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்) / இந்திய கலாச்சாரம் / கணிப்பொறி அறிவியல் / உயிர் வேதியியல் / மேம்படுத்தப்பட்ட மொழிப்பாடம் (அட்வான்ஸ்ட் லாங்க்வேஜ் -தமிழ்)

21.03.17 – செவ்வாய் – இயற்பியல் / பொருளியல்

24.03.17 – வெள்ளி – தொழில் கல்வி தியரி / அரசியல் அறிவியல் /  செவிலியர் கல்வி (பொது) / புள்ளியியல்

27.03.17 – திங்கள் – கணிதம் / விலங்கியல் /  நுண்ணுயிரியியல் / ஊட்டச்சத்து மற்றும் உணவியல்

31.03.17 – வெள்ளி – உயிரியல் / வரலாறு / தாவரவியல் / வணிக கணிதம்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு அட்டவணை:

* தேர்வு எழுதும் கால நேரம்: காலை 9:15 மணிக்கு தொடங்கி 12:00 மணிக்கு முடிகிறது.

08.03.17 – புதன் – தமிழ் முதல் தாள்

09.03.17 – வியாழன் – தமிழ் இரண்டாம் தாள்

14.03.17 – செவ்வாய் – ஆங்கிலம் முதல் தாள்

16.03.17 – வியாழன் – ஆங்கிலம் இரண்டாம் தாள்

20.03.17- திங்கள் – கணிதம்

23.03.17 – வியாழன் – அறிவியல்

28.03.17 – செவ்வாய் – சமூக அறிவியல்

30.03.17 – வியாழன் – மொழி (விருப்பத் தேர்வு).

Leave a Reply