shadow

10-12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு
exam
10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்குரிய அரையாண்டு தேர்வு சமீபத்தில் தமிழகமெங்கும் பெய்த கனமழையால் ஒத்தி வைக்கப்பட்டது என்பதை ஏற்கனவே அறிவோம். இந்நிலையில் இந்த தேர்வுகளுக்கான புதிய தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த தேர்வுகள் வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதி தொடங்கி ஜனவரி 27ஆம் தேதி வரை நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை தற்போது பார்ப்போம்.

12ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு தேதிகள்:

ஜனவரி 11 – மொழிப்பாடம் முதல் தாள்
ஜனவரி 12 – மொழிப்பாடம் இரண்டாம் தாள்
ஜனவரி 13 – ஆங்கிலம் முதல் தாள்
ஜனவரி 14 – ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜனவரி 18 – வணிகவியல், வீட்டு மனையியல், புவியியல்
ஜனவரி 19 – கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி,
ஜனவரி 21 – இயற்பியல், பொருளாதாரம்,
ஜனவரி 22 – வேதியியல், கணக்குப் பதிவியல்,
ஜனவரி 25 – உயிரியல், தாவரவயில், வரலாறு, வணிகக் கணிதம்
ஜனவரி 27 – கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, புள்ளியியல்,

தேர்வுகள் காலை 10 முதல் 1.15 வரை நடைபெறும். இதில் முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிடங்கள் விடைத்தாளில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.

10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் அட்டவணை:

ஜனவரி 11 – மொழிப்பாடம் முதல்தாள்
ஜனவரி 13 – மொழிப்பாடம் 2ம் தாள்
ஜனவரி 18 – ஆங்கிலம் முதல் தாள்
ஜனவரி 20 – ஆங்கிலம் 2ம் தாள்
ஜனவரி 22 – கணிதம்
ஜனவரி 25 – அறிவியல்
ஜனவரி 27 – சமூக அறிவியல்

அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு 10 முதல் 12ம் வகுப்பு தேர்வுகளுடன் சேர்த்து 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் ஜனவரி 11-ல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளுக்கு முன்னர் அரையாண்டு தேர்வுகள் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

English Summary:  The Directorate of School Education announced the timetable for SSLC and Higher Secondary (Plus 2) half-yearly examination to be held in January this year.

Leave a Reply