103 வயதில் கார் டிரைவராக பணிபுரியும் முதியவர்

கர்நாடக மாநிலத்தில் 103 வயது முதியவர் ஒருவர் கார் டிரைவர் பணி செய்யும் ஆச்சரியமான செய்தி வெளிவந்துள்ளது.

முன்னாள் ராணுவ வீரரான கர்நாடகாவை சேர்ந்த மைக்கேல் டிசோசா என்பவர் கடந்த 1959ஆம் ஆண்டு டிரைவிங் லைசென்ஸ் பெற்றார். அதுமுதல் கடந்த 85 ஆண்டுகளாக அவர் கார் டிரைவராக பணி செய்து வருகிறார். ஒவ்வொரு முறையும் அவர் தனது லைசென்ஸை புதுப்பித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 85ஆண்டுகால பணியில் ஒரே ஒருமுறை சீட் பெல்ட் அணியாமல் இருந்ததற்காக அபராதம் கட்டியுள்ளார். மேலும் இவர் தனது வாழ்நாளில் ஒரு விபத்தை கூட சந்திக்காமல் டிரைவர் பணியை தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *