shadow

வங்கதேசத்தில் மனிதாபிமான அடிப்படையில் 100 வயது சிறைக்கைதி விடுதலை.

jailநூறு வயதை தாண்டிய பெண் கைதி ஒருவரை மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுதலை செய்ய வங்கதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

20 வருடங்களுக்கு முன் ஒஹிதுன்னிசா என்ற பெண் குடும்பத்தகறாரில் உறவினர் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஆயுள்தண்டனை பெற்றார். கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவருக்கு தற்போது 100 வயதை தாண்டியுள்ளது. முதுமை காரணமாக தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று மனு ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்த ஒஹிதுன்னிசாவுக்கு வங்கதேச நாட்டின் தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹாவின் தலையீட்டால், மேல் முறையீட்டு நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

ஒஹிதுன்னிசா தனது பார்வையை இழந்துவிட்டதாகவும், பிறர் துணையால் மட்டுமே தற்போது அவரால் நகர முடியும் சூழ்நிலை இருப்பதால் அவர் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply