shadow

japanநீச்சல் என்னும் கலையை சிறுவயதில்தான் எளிதில் கற்றுக்கொள்ள முடியும். வளர்ந்து பெரிய ஆளாகிய பின்னர் நீச்சல் கற்றுக்கொள்வது என்பது மிகவும் கடினமானது. ஆனால் ஜப்பானை சேர்ந்த ஒரு பெண், 84 வயதில் நீச்சல் பழகியுள்ளார். அதுமட்டுமின்றி தனது 100வது வயதில் நீச்சலில் உலக சாதனை செய்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த மீக்கோ என்ற பெண் தனது 84வயதில்தான் நீச்சல் பழகினார். ஒருசில மாதங்களில் நீச்சலில் விடாத முயற்சியால் பயிற்சி பெற்று பின்னர்  2002 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் உள்ள கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் முதல் முதலாக பங்கு கொண்டார். அதில் 50 மீட்டர் பின்புற நீச்சல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.

அதனை தொடர்ந்து, 2004 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் 50, 100, 200 மீட்டர் பின்புற நீச்சல் போட்டிகளில் வெள்ளி பதக்கங்களை வெல்ல அசந்து போன ஜப்பான் அரசு, அவரை 90வது வயதில் ஜப்பான் நாட்டின் தேசிய நீச்சல் வீராங்கனையாக அங்கீகரித்தது. தொடர்ந்து தீவிர பயிற்சி மூலம் அடுத்தடுதது சாதனைகளை  படைக்கத் தொடங்கினார் மீக்கோ.

தீவிர பயிற்சிக்கு பின் கடந்த சனிக்கிழமை டோக்கியோ அருகில் உள்ள மட்சுயாமா என்ற இடத்தில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டியில் 1500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவில் பங்கேற்றார். அதோடு போட்டி தூரத்தை ஒரு மணி நேரம் 15 நிமிடம் 54 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை நிகழ்த்தினார். 100 வயது  மீக்கோவின் இந்த சாதனையை கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply