shadow

101 year 1   அமெரிக்காவில் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு பெண் தனது 101வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். இந்த நூறு வயது வாழ்க்கையில் அவர் தனது பிறந்தநாளில்தான் முதல்முறையாக கடற்கரையை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

101 year 2

ரூபி ஹால்ட் என்ற அமெரிக்க பெண் தனது இளமைக்காலத்தில் காட்டன் மில் ஒன்றில் பணிபுரிந்தார். கடுமையாக வேலை காரணமாகவும், வறுமை காரணமாகவும் அவர் எவ்வித சுற்றுலாவும் செல்லவில்லை. அவர் தனது வாழ்நாளில் இதுவரை கடல் மற்றும் கடற்கரை பகுதிகளை பார்த்ததே இல்லையாம்.

101 year 3

இந்நிலையில் தனது 101வது பிறந்தநாளில் தான் கடல்பகுதியை பார்க்கவேண்டும் என தனது உறவினர்களிடம் விருப்பம் தெரிவித்ததை அடுத்து அவரை முதன்முதலாக கடல்பகுதிக்கு அழைத்து சென்றனர். கடல் அலைகளையும், அலைகளின் இரைச்சலையும் கேட்டு அவர் மிகுந்து மகிழ்ச்சி அடைந்தார்.

101 year

Leave a Reply