Chennai Today News

தினகரன் ஆதரவாளர்கள் இன்றும் நீக்கம்: அதிரடி தொடர்வதால் அரசியலில் பரபரப்பு

தினகரன் ஆதரவாளர்கள் இன்றும் நீக்கம்: அதிரடி தொடர்வதால் அரசியலில் பரபரப்பு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றதை அடுத்து அதிமுகவினர் பலர் தினகரன் அணிக்கு மாறவிருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியை அடுத்து நேற்று சுமார் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தர்மபுரி, புதுக்கோட்ட, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் இன்றும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஈபிஎஸ்-ஓபிஎஸ் அதிரடி தொடர்வதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் இன்று டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியின் எம்.எல்.ஏவாக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!