சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ரூ.10 கோடி சம்பளத்தில் வேலை:


சென்னை ஐஐடியில் படித்து கொண்டிருக்கும் 10 மாணவர்களுக்கு ரூ.1 கோடி சம்பளத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நடப்பு ஆண்டில் சென்னை ஐஐடி மாணவர்கள் பலர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களில் முக்கியப் பணிகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மைக்ரோசாப்ட்,, ரூபாக், உபெர், இண்டீட், இன்டெல் போன்ற பல நிறுவங்கள் சென்னை ஐஐடி மாணவர்களுக்கு வேலை கொடுக்க முன்வந்துள்ளது ஆரோக்கியமாக பார்க்கப்படுகிறது..

சமீபத்தில் சென்னை ஐஐடி நடத்திய கேம்பஸ் இன்டர்வியூவுக்கு 256 நிறுவனங்கள் 968 பணி வாய்ப்புகளுடன் வந்தன. அவற்றில் 19 வெளிநாட்டு பணி வாய்ப்புகளும் அடங்கும். இந்த ஆண்டு முதல் முறையாக ஆப்பிள் நிறுவனமும் கேம்பஸ் இன்டர்வீயூ மூலம் மாணவர்களை பணிக்குத் தேர்வு செய்ய வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இன்டர்வியூவுக்கு பதிவு செய்திருந்த மாணவர்கள் மொத்தம் 1,100 பேர். இவர்களில் 837 பேர் வேலை வாய்ப்பு பெற்றிருக்கின்றனர். 70% மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட அதிகம். கடந்த ஆண்டில் 817 பேருக்கு வேலை வாய்ப்பு அமைந்துள்ளது.

அதிகபட்சமாக சிட்டி நிறுவனம் 25 பேருக்கு வேலை வழங்கியுள்ளது. இதற்கு அடுத்து, இன்டெல் (20), ஈ.எஸ்.எல். (19), பிளிப்கார்ட் (18) மற்றும் ஹெச்.சி.எல். (17) ஆகியவையும் அதிக வேலை வாய்ப்புகளைக் கொடுத்துள்ளன.

பிரபலமான நிறுவனங்கள் தவிர 38 ஸ்டார்ட் அப் நிறுவங்கள் 83 பேருக்கு வேலை வழங்கியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *