10 ரூபாய்க்கு கூட்டு பொறியலுடன் சாப்பாடு: பிரபல அரசியல் கட்சி வாக்குறுதி

மகராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் சிவசேனாவும், பா.ஜ.க-வும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதேபோல் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

இந்த நிலையில் சிவசேனா சார்பில் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு 10 ரூபாய்க்கு கூட்டு பொறியலுடன் கூடிய சாப்பாடு வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி சிவசேனா இளைஞரணித் தலைவர் ஆதித்ய தாக்கரே கூறுகையில், “10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்க வாக்குறுதி அளித்துள்ளோம். எங்கள் கட்சியின் நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேவின் கனவு ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க வேண்டும் என்பதுதான்

ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் கடைகளை அப்போதே அவர் தொடங்கினார். அவரது அந்தக் கனவை நிறைவேற்றுவது எங்கள் கடமை. அதற்காகவே இந்த வாக்குறுதியை அளித்துள்ளோம்.

மும்பையில் மட்டுமின்றி மகாராஷ்டிரா முழுவதும் இதனைச் செயல்படுத்துவோம். குறைந்த விலையில் உணவு என்பது இன்றைய காலத்தில் சாதாரண மக்களின் தேவையாக உள்ளது. உணவு சமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்களைப் பயன்படுத்துவோம். இதன் மூலம் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply