shadow

10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறக்கப்படும் கொடைக்கானல் குணா குகை

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘குணா’ படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே’ என்ற பாடல் கொடைக்கானலில் உள்ள ஒரு குகையில் படமாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. கமல் உள்பட குணா குழுவினர் கண்டுபிடித்த இந்த குகை, இந்த படம் வெளிவந்த பின்னர் சுற்றுலா பயணிகள் மத்தியில் புகழ் பெற்றது. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் இந்த குகையை பார்க்காமல் சென்றதில்லை என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் இந்த குகை ஆபத்து நிறைந்ததாக இருந்தால் பல சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்தது. இதனால் கொடைக்கானல் நகர நிர்வாகம் குகையை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மூடியது.

இந்த நிலையில் குணா குகையை மீண்டும் திறக்க வேண்டும் சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் தற்போது இந்த குணா குகைக்கு செல்ல மரப்படிகள் அமைத்துள்ளது. தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மீண்டும் வெகுவிரைவில் இந்த குகை திறக்கப்படவுள்ளதாக கூறப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply