shadow

10 மாதங்களில் 8 லுக்: எதுதான் உண்மையான ‘வலிமை’ லுக்!

அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த போதிலும் இந்த படத்தின் எந்த அப்டேட்டும் இதுவரை வெளிவரவில்லை என்பதால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர் இந்த நிலையில் அஜித் அவ்வப்போது வெளியே வரும்போதும், விழாக்களில் கலந்துகொள்ளும் போதும், இருக்கும் கெட்டப்புகளை வைத்து இதுதான் ‘வலிமை’ கெட்டப் என ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்

சமீபத்தில் கூட தனது மேனேஜர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்ட அஜீத்தின் கெட்டப்பை பார்த்து இதுதான் ‘வலிமை’ கெட்டப் என்று கூறிவருகின்றனர் கடந்த 10 மாதங்களில் இதேபோல் 8 கெட்டப் வந்துவிட்டது ஆனால் உண்மையில் ‘வலிமை’ படத்தின் கெட்டப் எது என்று தெரியாமல் அஜித் ரசிகர்கள் திணறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *