shadow

10ஆம் வகுப்பு பாஸ் ஆனவர்களுக்கு கடற்படையில் அலுவலக வேலை

இந்திய கடற்படையில் “கோர்ஸ் காமென்சிங் – எம்.ஆர்.-2018” பயிற்சிக்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி பெற்றவர்களில் திருமணம் ஆகாத ஆண் இளைஞர்கள் சமையல்காரர், ஏவல் பணியாள், சுகாதார ஊழியர் உள்ளிட்ட பணிகளுக்கு நியமிக்கப்படுவார்கள். இந்திய குடியுரிமை பெற்றிருப்பதுடன், இதில் சேர தேவையான இதர தகுதிகள் பின்வருமாறு,

வயது வரம்பு: 1-4-1997 மற்றும் 31-3-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: மெட்ரிக்குலேசன் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி (உதாரணம், 10ஆம் வகுப்பு)

உடல்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரம், உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும். மார்பளவு இயல்பு நிலையில் 5 செ.மீ. இருப்பதுடன் விரியும் தன்மை கொண்டிருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடி இல்லாமல் 6/36 மற்றும் 6/36 அளவுக்குள் இருக்க வேண்டும். கண்ணாடி அணிந்திருத்தால், 6.9 மற்றும் 6/12 அளவுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்உறுதித் தேர்வு, உடல் அளவுத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை.

பயிற்சிக் காலம்: 15 வார காலம் பயிற்சி பெற்ற பிறகு பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் கொண்டவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 9-7-2017

விரிவான தகவல்களுக்கு: www.joinindiannavy.gov.in

Leave a Reply