10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அறிவியல் செய்முறைத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

10ஆம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடித் தனித்தேர்வர்களுக்கு வரும் 20-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை அறிவியல் செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து அரசுத்தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பத்தாம் வகுப்புக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே வரும் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ள நேரடித் தனித்தேர்வர்கள், ஏற்கெனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள் ஆகியோர் வரும் 20 முதல் நடைபெறவுள்ள அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகளில் தவறாமல் கலந்துகொண்டு தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ள தேதி குறித்து அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளியிலிருந்து அறிவிப்பு ஏதும் தங்கள் முகவரிக்கு கிடைக்கப் பெறாதவர்கள் இந்த அறிவிக்கையை தெரிந்து கொண்டு செய்முறைத் தேர்வு நடைபெறும் பள்ளியில் தலைமையாசிரியர், தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரை அணுக வேண்டும்

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *