shadow

ship sinksரஷியா நாட்டின் கடல்பகுதி அருகே தென்கொரிய கப்பல் ஒன்று திடீரென மூழ்கியதில் 50 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தென்கொரியாவை சேர்ந்த தனியார் மீன்பிடி கப்பல் ஒன்றில் சென்ற மீன்பிடிக்கும் கும்பல் ஒன்று ரஷியாவில் உள்ள பெர்ரிங் கடல் பகுதியில் மீன்களை பிடிக்க சென்றனர். அந்த கப்பலில் மொத்தம் 62 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களில் 35 இந்தோனேசியர்கள், 13 பிலிப்பைன்ஸ் நாட்டினர், 11 தென்கொரியர்கள், ரஷியாவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவரும் இதில் இருந்தார்.

இந்நிலையில் அந்த கப்பல், ரஷியா கடல் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மூழ்கத்தொடங்கியது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் தென்கொரியாவை சேர்ந்த மீட்பு படையினர் விரைந்தனர். ரஷ்யாவில் இருந்து 4 மீன்பிடி கப்பல்களும் அனுப்பபட்டன.

ஆனால் மீட்புப்படையினர் சென்றடைவதற்குள் அந்த கப்பலில் இருந்த 50 மினவர்களை காணவில்லை. அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இருப்பினும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருப்பதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply