shadow

ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தது ஏன்? அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சமீபத்தில் ஹெலிகாப்டரில் சென்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

கஜா புயல் பாதிப்புகளை ஹெலிகாப்டரில் முதலமைச்சர் ஆய்வு செய்ததால் தான், உடனடியாக பிரதமரை சந்தித்து விளக்க முடிந்தது. அந்த அடிப்படையில் நேற்றே மத்திய அரசு குழு ஒன்றையும் தமிழகத்துக்கு அனுப்புவது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று அந்த குழு தமிழகத்தில் ஆய்வை தொடங்க உள்ளது. எனவே கஜா புயலை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்காமல் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூறினார்.

Leave a Reply