shadow

ஹெச்யுஎல்நிகர லாபம் 9% உயர்வு

எப்எம்சிஜி துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் யுனிலீவர் (ஹெச்யுஎல்) நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 9 சதவீதம் உயர்ந்து ரூ.1,283 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,174 கோடியாக நிகர லாபம் இருந்தது.

நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர விற்பனை 5 சதவீதம் உயர்ந்து ரூ.9,094 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.8,662 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் முக்கியமான பிராண்டான சர்ஃப் நல்ல வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால் நிறுவனத்தின் தண்ணீர் பிரிவில் பெரிய வளர்ச்சி இல்லை. தவிர ஜிஎஸ்டி -க்கான ஆயத்த பணிகளின் தாக்கம் கடந்த காலாண்டில் எதிரொலித்ததாக நிறுவனம் தெரிவித்தது.

திங்கள் கிழமை ஹெச்யுஎல் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியாகின. நேற்றைய வர்த்தகத்தில் அதிகபட்சம் 3.18% வரை இந்த பங்கு உயர்ந்தது. வர்த்தகத்தின் இடையே 52 வார உச்சபட்ச விலையை தொட்டது. ஆனால் லாபத்தை வெளியே எடுக்கும் போக்கு அதிகரித்ததால் தொடக்கத்தில் இருந்த ஏற்றம் சரிந்தது. நேற்றைய முடிவில் 0.46% மட்டுமே உயர்ந்து முடிந்தது

Leave a Reply