shadow

ஹால் டிக்கெட்டில் மாணவர் புகைப்படத்திற்கு பதில் பிள்ளையார் படம்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டில் சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படத்திற்கு பதில் காஜல் அகர்வாலின் புகைப்படம் இருந்தது உள்பட பல்வேறு குழப்பங்கள் இருந்ததை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் கல்லூரி மாணவர் ஒருவரின் ஹால் டிக்கெட்டில் அந்த மாணவரின் புகைப்படத்திற்கு பதில் பிள்ளையார் படம் இருந்ததால் அந்த மாணவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்

பீகார் மாநிலத்தில் கல்லூரி மாணவர் கிருஷ்ணகுமார் ராய். இவர் லலித நாராயண் மிதிலா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஜக்தேஷ் நந்தன் என்ற கல்லூரியில் பொருளியல் படித்து வருகிரார்.

இவருக்கு இந்த ஆண்டிற்கான தேர்வு எழுத நேற்று ஹால் டிக்கெட் வந்தது. அந்த ஹால் டிக்கெட்டை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக அந்த ஹால்டிக்கெட்டில் பிள்ளையார் படம் இருந்தது. இதுகுறித்து அவர் கல்லூரி நிர்வாகத்திடம் கூறியபோது அவர்களே பிள்ளையார் படத்தை நீக்கிவிட்டு மாணவரின் புகைப்படத்தை ஒட்டி கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply