ஹரிஷ் கல்யாண் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த பட்மான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற திரைப்படம் வரும் மார்ச் மாதம் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இயக்குனர் ஜெயக்கொடி இயக்கிய ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். மேலும் விஜய் டிவி புகழ் மாகாபா ஆனந்த், பாலாசரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைத்துள்ளார்.
மார்ச் 23ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள், அதனையடுத்து உலககோப்பை, மாணவர்களின் தேர்வு ஆகியவை வருவதால் மார்ச் இறுதிக்குள் பல திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.