shadow

ஸ்வைப்பிங் இயந்திரங்கள்; அவசியமான மாற்றம்

 புது வருடம் நெருங்கி வரும் வேளையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எதிர்கால திட்டங்கள் குறித்த சிந்தனை இருக்கும். ஆனால் வரும் ஆண்டில் இந்தியர்கள் எல்லோரும் ஒரே உறுதிமொழியை எடுத்துக் கொள்வதற்கு ஏற்ப நெருக்கடி கொடுத்துள்ளது மத்திய அரசு. அதுதான் மின்னணு வர்த்தகம். பணமற்ற வர்த்தகத்துக்கு மாறுங்கள் என்று மக்களுக்கு மட்டும் அறிவுறுத்தவில்லை. வர்த்தகர்களுக்கும் இனி இதுதான் எதிர்காலம் என்று கூறியுள்ளது.

முறைப்படுத்தப்படாத தொழில்துறையினரும் இனி மொபைல் வாலட்டுக்கு மாறினால்தான் தொழிலில் மேற்கொண்டு நிற்க முடியும் என்கிற சூழலில், டிஜிட்டல் பரிவர்த்தனைக்குள் எப்படி தங்களைப் பொருத்திக் கொள்வது என யோசிக்கத்தான் செய்கிறார்கள் வர்த்தகர்கள்.

முன்பு ஒரு 500 ரூபாய் நோட்டை கையில் வைத்துக் கொண்டே பத்து பேரிடம் பத்து விதமாக பரிவர்த்தனை செய்து விடலாம். கடைசியில் 500 ரூபாய் நோட்டே திரும்ப நம் கைக்கு கிடைத்து விடும். ஆனால் மின்னணு பரிவர்த்தனையில் அது நடக்காது. ஆனாலும் என்ன 2017-ம் ஆண்டின் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறினால்தால் தொழிலை மேற்கொள்ள முடியும் என்கிற நிலைமையில் வாடிக்கையாளர்களை வரவேற்க தயாராக இருக்கிறார்களா வர்த்தகர்கள்.

பாயின்ட் ஆப் சேல்ஸ்

மின்னணு பரிவர்த்தனைகளில் பல வழிகள் இருந்தாலும் பெரும்பான்மை யானவர்களுக்கு பரிச்சயமானதும், வர்த்தகர்களுக்கு வசதியானதும் ஸ்வைப்பிங் இயந்திரங்கள்தான். பாயிண்ட் ஆப் சேல்ஸ் இயந்திரங்கள் என்கிற ஒருங்கிணைந்த வகையிலும் ஸ்வைப்பிங் வசதிகள் உள்ளன. ஏற் கெனவே பெட்ரோல் நிலையங்களிலும், பல வர்த்தக நிறுவனங்களிலும் ஸ்வைப் பிங் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில் சிறு வர்த்தகர்கள் பயன்படுத்தும் வகையில் இதை கொண்டு செல்வதற்கு அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு இந்த பணிகள் மேலும் துரிதமாகியுள்ளன.

பணப் பற்றாக்குறையால் ஏற்பட்ட வர்த்தக பாதிப்பினால் பல வர்த்தகர் களும் இப்போது மிக வேகமாக ஸ்வைப் பிங், பாயிண்ட் ஆப் சேல்ஸ் இயந் திரங்களுக்கு மாறி வருகின்றனர். ஆனால் தேவைக்கு ஏற்ப இயந்திரங் கள் கிடைக்காததால் வர்த்தகம் பாதிக்கப் பட்டுள்ளது. நவம்பர் 8-ம் தேதிக்கு முன்னர் நடைபெற்ற வர்த்தகத்துக்கும், இப்போது நடைபெறும் வர்த்தகத்துக்கு இடையே 50 சதவீத அளவுக்கு வித்தியாசம் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.

பற்றாக்குறை

நவம்பர் 8 தேதிக்கு பிறகு சூழலை உள்வாங்கிக் கொண்டு மின்னணு வர்த்தகத்துக்கு மாற ஸ்வைப்பிங் மிஷின் விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் இயந்திரங்கள் கிடைக்கவில்லை. ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள்படி இந்தியாவில் 76 கோடி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன ஆனால் தற்போது 15 லட்சம் வர்த்தக நிறுவனங்கள் மட்டுமே ஸ்வைப்பிங் வசதியோடு உள்ளன. மேலும் 20 லட்சம் இயந்திரங்களுக்கான தேவை உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்களும், ஸ்வைப்பிங் இயந்திரங்களும் பற்றாக்குறையாக உள்ளன என்கிறனர் இந்த துறை சார்ந்தவர்கள்.

எங்கு வாங்குவது

வங்கிகள் தங்களது வாடிக்கையாளர் களுக்கு ஸ்வைப்பிங் இயந்திர வசதியை அளிக்கின்றன. தேவை இருக்கும் வர்த் தகர்கள் வங்கியில் விண்ணப்பிக்க வேண்டும். கேஒய்சி நடைமுறைகளுக் குப் பிறகு இயந்திரம் ஒதுக்குவார்கள். வங்கிகள் இதற்கென ஏஜென்சிகள் அமர்த்தியுள்ளன. இந்த ஏஜென்சிகள் மூலம் இயந்திரங்கள் வாடிக்கையாளர் களுக்கு வந்து சேரும். இயந்திரம் தொடர்பான சேவைகளை ஏஜென்சிகளே மேற்கொள்வார்கள். வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களுக்கு வாடிக்கை யாளர் சேவை மைய உதவி கிடைக்கும்.

வங்கிகள் அளிக்கும் ஸ்வைப்பிங் இயந்திரங்கள் தவிர எம்ஸ்வைப், ஐபிஎம், பேயுமணி, மில்லினியம், டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் போன்ற பல நிறுவனங்களும் பாயிண்ட் ஆப் சேல்ஸ் ஸ்வைப்பிங் இயந்திர வசதிகளை அளிக்கின்றன. இந்த ஸ்வைப்பிங் இயந்திரங்கள் இண்டர்நெட் டேட்டா இணைப்பின் வழியாகவும், ஜிபிஆர்எஸ் இணைப் பின் மூலமும் இயங்குகின்றன. இயந் திரத்தின் விலை, நெட்வொர்க் வசதி யைப் பொறுத்து இவற்றை தேர்ந்தெடுக் கலாம். இரண்டு வகையிலும் வாடிக்கை யாளரிடமிருந்து பெற்ற தொகைகள் அடுத்த நாள் வங்கிக்கணக்கில் சேர்ந்துவிடும்.

எவ்வளவு விலை

பாயிண்ட் ஆப் சேல்ஸ் இயந்திரங் களில் பிரிண்ட் வசதி கொண்ட இயந்திரம் சுமார் ரூ.30,000 வரையிலும் விற்கப்படுகிறது. பிரிண்ட் வசதி இல்லாத, எஸ்எம்எஸ் வழியாக பரிமாற்றம் செய்யும் சிறிய இயந்திரங்கள் ரூ.2000 த் துக்கும் கிடைக்கும். வங்கியின் ஸ்வைப் பிங் இயந்திரம் என்றால் மாதாந்திர வாடகை ரூ.300 முதல் 600 வரையிலும் வங்கிகளுக்கு அளிக்க வேண்டும். இந்த கட்டணம் வங்கிகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது.

பரிமாற்றக் கட்டணங்கள்

பொதுவாக டெபிட் கார்டு , கிரெடிட் கார்டு ஸ்வைப்பிங் செய்கிறபோது 1 முதல் 2.5 சதவீதம் வரையில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு டிசம்பர் 31 ம் தேதிவரை இவற்றுக்கான சேவைக் கட்டணத்திலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. இதற் கிடையே பாயிண்ட் ஆப் சேல்ஸ் இயந் திரங்களுக்கான உற்பத்தி வரியிலிருந்து 12.5% விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இயந்திரங்களில் விலை குறையும் என அரசு குறிப்பிட் டுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் இறக்குமதி செய்யப்படும் பாயிண்ட் ஆப் சேல்ஸ் இயந்திரங்களுக்கு பிஐஎஸ் முத்திரை கட்டணத்திலிருந்து விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

என்ன இழப்புகள்

பொதுவாக பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன், பணத்தின் மதிப்பு வாடிக்கையாளர், வர்த்தகர்கள் இருவருக்குமே குறையாமல் இருந்தது. அதாவது ரூ.500 மதிப்பானது பத்து நபர்கள் பரிமாற்றத்துக்கு பிறகும் 500 ரூபாய் மதிப்பைக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது மின்னணு பரிவர்த்தனைகளில் ரூ.500 பரிவர்த்தனை செய்தால் குறைந்தபட்சம் 2% சேவைக் கட்டணம் என்றாலும் 10 ரூபாய் செலுத்த வேண்டும். வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மின்னணு பரிமாற்றம் செய்தால் கட்டணம், கார்டு வழியாக செலுத்துகிறபோதும் இழப்பு ஏற்படுகிறது என்பது அவர்களது வாதமாக உள்ளது

தற்போதைய சூழ்நிலையில் அரசின் சலுகைக் காலத்துக்கு பிறகு மின்னணு பரிவர்த்தனைகளுக்கான சேவைக் கட்டணம், பரிமாற்றக் கட்டணம் உள்ளிட் டவை வாடிக்கையாளர்களுக்கு சிறு இழப்பாக இருக்கும். வர்த்தக நடவடிக் கைகள் உயரும் சூழ்நிலையில் பரிவர்த் தனை கட்டணங்களை மத்திய அரசு குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எது எப்படியோ 2017 ஆம் ஆண்டு நீங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Leave a Reply