shadow

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: சிபிஐ அதிகாரிகள் விசாரணை

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் தீவிரம் காட்டியுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களிடம் இருந்து சிபிஐ அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர். சிபிஐ எஸ்.பி. சரவணன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும் பொதுமக்கள் இதுகுறித்து போராட்டம் நடத்த வேண்டாம் என்றும் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆலையை திறக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாய உத்தரவை ஜனவரி 21 வரை அமல்படுத்த தேவையில்லை என்ற உத்தரவை எதிர்த்து மனுதாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply