shadow

.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முக்கிய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை பின்வருமாறு:

தீர்மானம் 1: மேகதாது அணை தொடர்பாக கர்நாடகாவுக்கு, மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்

தீர்மானம் 2: கஜா புயல் பாதித்த மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், அந்த பகுதி மக்களின் விவசாய கடன் மற்றும் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும்

மேலும் இந்த கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ‘மக்களிடம் செல்வோம், சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம் என்ற முழக்கத்தை அடிப்படையாக வைத்து ஜனவரி முதல் ஊராட்சி பகுதிகளில் திமுக பயணம் மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

அண்ணா அறிவாலயம், மு.க.ஸ்டாலின், தீர்மானம், கஜா புயல், மேகதாது அணை

Leave a Reply