ஸ்டாலினின் கல்விக் கொள்கை குழு குறித்து தமிழிசை கேள்வி

மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்த திட்டத்தை வெளியிட்டது என்பது அனைவரும் அறிந்ததே

இந்த புதிய கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் இது குறித்து ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தார்

இந்த குழு, கல்விக் கொள்கையை ஆய்வு செய்து அறிக்கை தரும் என்றும் அந்த அறிக்கையை மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் முக ஸ்டாலின் இன்று காலை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் இந்த குழு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். கல்விக்கொள்கை குறித்து கருத்து கூற கால அவகாசம் தந்த பிறகு குழு அமைத்து இருக்கின்றார்கள் என்றால் அதில் உள்நோக்கம் இல்லையா என்று கேள்வி எழுப்பிய தமிழிசை, கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்து கருத்துக்கூற 10 பேர் குழுவை ஸ்டாலின் அமைத்தது தேவையில்லாத வேலை என்றும் கூறினார்

மேலும் முழுமையாக அறிந்து கொள்ளாமல் தான் புதிய கல்விக் கொள்கை குறித்து ஸ்டாலின் கருத்து சொன்னாரா என்ற கேள்வியும் எழுவதாக அவர் தெரிவித்தார்

Leave a Reply