shadow

ஸியோமி நிறுவனம் 20,000 வேலைவாய்ப்புகளை இந்தியாவில் ஏற்படுத்துகிறது!

ஸியோமி நிறுவனம், 20000 வேலைவாய்ப்புகளை இந்தியாவில் ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

இத்தகவலை ஸியோமி நிறுவனத்தின் அதிபர் லீ ஜூன் கூறியுள்ளார். எகனாமிக் டைம்ஸ் நடத்தி வரும் பொருளாதார மாநாட்டில் பேசியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘’மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் பிரதமர் மோடியின் ஆலோசனைப்படி, 20,000 வேலைவாய்ப்புகளை இந்தியா முழுவதும் ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். குறிப்பாக, ஆன்லைன் மூலமாக, ஸ்மார்ட்ஃபோன் விற்பனை செய்வதில், ஸியோமி முன்னிலை வகிக்கிறது. எங்களது ரெட் மி ரக ஃபோன்களுக்கு, இந்திய வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு நிலவுகிறது.

இதன் அடிப்படையில், மி சேவை மையங்களை, இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இதன்மூலமாக, ஸ்மார்ட்ஃபோன் சார்ந்த ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேவைகளை இந்தியாவில் வழங்குவதோடு, ஏராளமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் முடியும்,’’ எனக் குறிப்பிட்டார்.

ஸியோமி நிறுவனம், இந்திய ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் 29.3% பங்களிப்பை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply