shadow

வைரல் ஆவதற்காகவே பயணம் செய்ய விரும்பும் இந்தியர்கள்

சமூக வலைதள பிரபலம்’ ஆவதற்காக மட்டுமே 63 சதவிகித இந்தியர்கள் புதுப்புது இடங்களுக்குப் பயணம் செய்வதற்கு விரும்புவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

Booking.com என்ற டிராவல் இணையதளம் ஒன்று இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் பயணங்கள் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

இதில் 66 சதவிகித இந்தியர்கள் சமூக வலைதளங்களில் ஒரு டிராவல் யூடியூபர், டிராவல் ப்ளாகர் எனத் தங்களை முன்னிறுத்திக்கொள்ளவே பயணம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

சோசியல் மீடியாவில் தங்களுக்கென ஒரு அந்தஸ்து வேண்டும் என்பதற்காகவே 63 சதவிகித இந்தியர்கள் பயணம் செய்வதாகத் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் பிரபலம் ஆவதற்கான முக்கியக் கருவியாக ‘டிராவல்’ மாறியுள்ளது என்றே கூறுகின்றனர் பிரபல டிராவல் நிறுவனமான Booking.com.

மேலும் இந்த ஆய்வில், ‘பயணத்தில் கடலுக்கு அடியில் தங்குவதை 60 சதவிகித இந்தியர்கள் விரும்புகின்றனர். பிரபலங்கள் பயணம் செய்யும் இடங்கள், தங்கும் இடங்கள் ஆகியவற்றைப் பின்பற்றி அதே போன்ற இடங்களுக்குச் செல்வதையும் தங்குவதையும் 53 சதவிகித இந்தியர்கள் விரும்புகின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில் பயணங்கள் மேற்கொண்ட 21,500 பேரிடம் தங்களது பயண அனுபவம், அடுத்த 12 மாதங்களுக்குத் தாங்கள் மேற்கொள்ளத் தயாராகும் பயணம் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வே எடுக்கப்பட்டு இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

Leave a Reply