வைரமுத்துவை பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும: ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி திடுக்கிடும் தகவல்
பாடகி சின்மயி சமீபத்தில் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து ‘மீடூ’வில் குற்றஞ்சாட்டிய நிலையில் அவரை தொடர்ந்து வேறு சில நடிகைகளும் பலர்மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். அர்ஜூன், சிம்பு வரை இந்த குற்றச்சாட்டு நீண்டுகொண்டே வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து ஏ.ஆர்.ரஹைனா பேட்டி ஒன்றில் சின்மயி கூறியிருப்பதில் உண்மை இருக்கும் என நான் நம்புகிறேன். ஏனெனில் என்னிடம் வைரமுத்து குறித்து வேறுசில பாடகிகளும் இதேபோன்ற குற்றச்சாட்டினை கூறினர். ஆனாலும் இந்த விஷயத்தை இவ்வளவு தூரம் வளரவிட்டது தவறு. முளையிலேயே கிள்ளியிருக்க வேண்டும். இத்தனை வருடம் கழித்து பேசுவது நிச்சயம் தவறுதான் என்று கூறினார்
மேலும் வைரமுத்து ஒருவரை மட்டும் டார்கெட் செய்யாமல் இந்த வகை குற்றங்கள் செய்த அனைவரையும் வெளியே கொண்டு வர வேண்டும். அப்போதுதான் இனிமேலாவது இதுபோன்ற தவறுகளை செய்ய ஆண்களுக்கு ஒரு பயம் வரும்’ என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.