வேலூர் தொகுதி அமமுக வேட்பாளர் அறிவிப்பு

வேலூர் மக்களவை தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் அறிவிப்பில் சுறுசுறுப்பாகி வருகிறது

இந்த நிலையில் திமுக, அதிமுக சார்பில் ஏற்கனவே போட்டியிட்டவர்கள்தான் இந்த தேர்தலிலும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் புதியநீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் K.பாண்டுரங்கன் என அமமு கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்

Leave a Reply