வெள்ள நீரை வெளியேற்ற உதவிய டிராபிக் போலீஸ்

டிராபிக் போலீஸ் என்றால் டிராபிக்கை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பது மட்டுமின்றி சாலையை சரிசெய்ய வேண்டும் என்ற கடமையையும் செய்த டிராபிக் போலீஸ் ஒருவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

ஐதராபாத்தில் சமீபத்தில் கனமழை பெய்தபோது அங்குள்ள சாலை ஒன்றில் வெள்ளநீர் தேங்கியது. இதனையடுத்து வாகன ஓட்டிகளும் சாலையில் நடந்து செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் டிராபிக்கை கட்டுப்படுத்தி வந்த போலீஸ் ஒருவர் உடனே ஒரு குச்சியை எடுத்து வெள்ளநீர் தேங்கி கிடந்ததை கால்வாயில் செல்ல வைக்கும் முயற்சியில் தானே இறங்கினார். அவருடைய இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

 

Leave a Reply