shadow

வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று வெனிசுலா. வெனிசுலா நாட்டின் கிழக்குப் பகுதியில் இன்று திடீரென சக்திவாய்ந்த
நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.

இந்த நிலநடுக்கம் 7 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் எதுவும் இன்னும் வெளிவரவில்லை

இந்த நிலநடுக்கத்தை வெனிசுலா மற்றும் கொலம்பிய நாட்டு மக்கள் உணர்ந்ததாகவும், நிலநடுக்கம் ஏற்பட்டதும் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதாகவும், அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டபோது அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களும், வீடுகளில் இருந்தவர்களும் அலறியடித்து தெருக்களில் தஞ்சம் புகுந்ததாகவும் தெரிகிறது

வெனிசுலா, நிலநடுக்கம், ரிக்டர், அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம்

Leave a Reply